Tamil Questions
Practice Tamil questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.
574Questions
Browse Questions
Page 28 of 29
Q541.Book Back Question
பயன்தூக்கார் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால் அது எதனை விடப் பெரியதாகும்?
A
வானகம்
B
கடல்
C
வையகம்
D
மலை
Q542.Book Back Question
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யாது?
A
சொற்பொருள் பின்வருநிலையணி
B
நிரல்நிறை அணி
C
ஏகதேச உருவக அணி
D
வேற்றுமை அணி
Q543.Text
கென்யாவில் மூன்று கோடி மரங்களை நட்டு வளர்த்து 2004-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?
A
மலாலா
B
வங்காரி மாத்தாய் (Wangari Maathai)
C
கிரேட்டா தன்பெர்க்
D
மதர் தெரசா
Q544.Text
தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர் யார்?
A
வேதநாயகம்பிள்ளை (நீதிபதி மாயூரம் வேதநாயகர்)
B
மாதவையா
C
கல்கி
D
புதுமைப்பித்தன்
Q545.Text
உத்தமசோழன் எழுதிய "முதல்கல்" என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
A
மனிதத்தீவுகள்
B
தஞ்சைச் சிறுகதைகள்
C
குருவி மறந்த வீடு
D
கனல்பூக்கள்
Q546.Text
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய பத்துப்பாட்டு நூல் எது?
A
முல்லைப்பாட்டு
B
நெடுநல்வாடை
C
மதுரைக்காஞ்சி
D
பட்டினப்பாலை
Q547.Text
தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் 1856-ல் எங்கு அமைக்கப்பட்டது?
A
சென்ட்ரல்
B
இராயபுரம்
C
எழும்பூர்
D
தாம்பரம்
Q548.Text
இந்திய-சாரசனிக் கட்டடக்கலை பாணியில் 1768-ல் கட்டி முடிக்கப்பட்ட சென்னையின் முதல் கட்டடம் எது?
A
ரிப்பன் கட்டடம்
B
சேப்பாக்கம் அரண்மனை
C
விக்டோரியா அரங்கு
D
உயர்நீதிமன்றம்
Q549.Text
கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரான்சிஸ் டே சென்னப்பரின் மகன்களிடமிருந்து மதராசப்பட்டினத்தை வாங்கிய நாள் எது?
A
15.08.1947
B
22.08.1639
C
26.01.1950
D
01.11.1956
Q550.Text
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் "மல்லியர்பா" என்னும் துறைமுகமாகச் சுட்டப்பட்ட இன்றைய சென்னைப் பகுதி எது?
A
மகாபலிபுரம்
B
மயிலாப்பூர்
C
கோவளம்
D
பல்லாவரம்
Q551.Book Back Question
பொருத்துக: (அ) அவன், அவள், அவர் - 1) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை, (ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - 2) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, (இ) நாம் முயற்சி செய்வோம் - 3) தன்மைப் பன்மைப் பெயர்கள், (ஈ) நாங்கள், நாம் - 4) பதிலிப் பெயர்கள்
A
அ-4, ஆ-1, இ-2, ஈ-3
B
அ-2, ஆ-3, இ-4, ஈ-1
C
அ-3, ஆ-4, இ-1, ஈ-2
D
அ-4, ஆ-3, இ-1, ஈ-2
Q552.Book Back Question
யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே எவை?
A
அஃறிணை, உயர்திணை
B
உயர்திணை, அஃறிணை
C
விரவுத்திணை, அஃறிணை
D
விரவுத்திணை, உயர்திணை
Q553.Book Back Question
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே / அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் எது?
A
நன்னூல்
B
அகத்தியம்
C
தொல்காப்பியம்
D
இலக்கண விளக்கம்
Q554.Book Back Question
தமிழில் திணைப்பாகுபாடு எதன் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது?
A
பொருட்குறிப்பு
B
சொற்குறிப்பு
C
தொடர்க்குறிப்பு
D
எழுத்துக்குறிப்பு
Q555.Book Back Question
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று தவறு, காரணம் தவறு
D
கூற்று சரி, காரணம் சரி
Q556.Book Back Question
"பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென" - இதில் அடிக்கோடிட்ட பொய்யா என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
உரிச்சொல் தொடர்
C
இடைச்சொல் தொடர்
D
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Q557.Book Back Question
"சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம்" என்பதற்குக் கூறப்படும் காரணங்கள் யாவை?
A
நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
B
மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பெரும் பங்கு
C
இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
D
இவை அனைத்தும்
Q558.Book Back Question
"நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று கவிஞர் அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது எதனை?
A
சூரிய ஒளிக்கதிர்
B
மழை மேகங்கள்
C
மழைத்துளிகள்
D
நீர்நிலைகள்
Q559.Book Back Question
நெடுநல்வாடை பாடல் வழிப் பொருத்துக: (அ) குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன, (ஆ) விலங்குகள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன, (இ) பறவைகள் - 3) குளிரால் நடுங்கின, (ஈ) பசுக்கள் - 4) மேய்ச்சலை மறந்தன
A
அ-1, ஆ-3, இ-4, ஈ-2
B
அ-3, ஆ-4, இ-2, ஈ-1
C
அ-3, ஆ-2, இ-1, ஈ-4
D
அ-2, ஆ-1, இ-3, ஈ-4
Q560.Text
தமிழில் ய், ர், ழ் என்னும் மூன்று மெய்யெழுத்துகள் மட்டுமே எவ்வாறு வரும் இயல்புடையவை?
A
சொல்லின் முதலில் வரும்
B
ஈரொற்றாய் வரும்
C
சொல்லின் இறுதியில் வாரா
D
முற்றிலும் தோன்றா
More Practice