All Questions
Class 11 / Chemistry
Class 11 Chemistry Textbook Questions
All Questions (298)Practice textbook-based MCQs by topic.
Q1.Book Back Question
40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு யாது?
A
40 மி.லி CO2 வாயு
B
40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு
C
60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு
D
120 மி.லி CO2 வாயு
Q2.Book Back Question
தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு: 200X = 90%, 199X = 8%, 202X = 2%. இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு என்ன?
A
201 u
B
202 u
C
199 u
D
200 u
Q3.Book Back Question
கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 * 10^23 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.022 * 10^22.
காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.022 * 10^22.
A
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) கூற்றுக்கான சரியான விளக்கம்
B
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) சரியான விளக்கமல்ல
C
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
D
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு
Q4.Book Back Question
கார்பன், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய இரு ஆக்சைடுகளை உருவாக்குகிறது. இதில் எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?
A
கார்பன்
B
ஆக்ஸிஜன்
C
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்
D
இரண்டும் இல்லை
Q5.Book Back Question
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9 g eq^-1 எனில், அதன் நீரற்ற ஆக்சைடின் மூலக்கூறு நிறை என்ன?
A
102 g
B
270 g
C
27 g
D
78 g
Showing questions 1–5 of 298